குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
2023 உலக பல்கலைக்கழக விளையாட்டுகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது "மிகவும் பெருமைக்குரிய தருணம்"- குடியரசு துணைத்தலைவர்
Posted On:
09 AUG 2023 1:49PM by PIB Chennai
உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்களின் அற்புதமான செயல்திறனைக் குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு. ஜக்தீப் தன்கர் பாராட்டியுள்ளார்.
மாநிலங்களவை சார்பில் வாழ்த்து தெரிவித்த திரு தன்கர், இந்திய விளையாட்டு வீரர்கள் 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் சாதனை செய்து வரலாறு படைத்தது மிகவும் பெருமைக்குரிய தருணம் என்றார். "அவர்களின் முன்மாதிரியான செயல்திறன் தேசத்திற்கு ஊக்கமளிக்கும், உத்வேகமூட்டும் " என்று அவர் மேலும் கூறினார்.
இந்திய விளையாட்டு வீரர்களின் சிறந்த சாதனைகளைப் பாராட்டிய திரு தன்கர், அவர்களின் சாதனைகள் விளையாட்டுத் துறையில் நமது விரைவான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கின்றன என்றும், நமது விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத கவனம், மகத்தான கடின உழைப்பு, முழு மனதுடனான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு சான்றாகும் என்றும் கூறினார்.
விளையாட்டுத் துறையில் அரசின் உறுதியான முன்முயற்சிகள் மற்றும் கொள்கைகளை அவர் தமது அறிக்கையில் அங்கீகரித்துள்ளார்.
****
ANU/AD/SMB/KPG
(Release ID: 1947098)
Visitor Counter : 162