குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மாநிலங்களவையில் இன்று ஒரு சிறப்பு தருணம் : மகளிர் நிறைந்திருந்த சிறப்பு நிகழ்வு
இடுகை இடப்பட்ட நாள்:
08 AUG 2023 6:23PM by PIB Chennai
மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது அவையை நடத்திய தலைவர், மேஜை ஊழியர்கள் என அனைவரும் சிறிது நேரம் பெண்களாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு முதல் முறையாக நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினர் திருமதி மம்தா மொகந்தா அவையில் பேசிக் கொண்டிருந்தபோது, திருமதி பாங்னான் கொன்யாக் அவை நடவடிக்கைகளுக்குத் தலைமை வகித்தார். அவையின் மையப்பகுதியில் உள்ள இருக்கைகள் முழுவதும் பெண் அதிகாரிகளாக இருந்தனர்.
***
ANU/SM/PLM/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1946891)
வருகையாளர் எண்ணிக்கை : 186