சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திரதனுஷ் இயக்கம் தொடர்பான புதிய தகவல்

Posted On: 08 AUG 2023 5:03PM by PIB Chennai

மிஷன் இந்திரதனுஷ் (எம்.ஐ) என்பது உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (யுஐபி) கீழ் ஒரு சிறப்பு இயக்கமாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பகுதிகளில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது, இது தடுப்பூசிகளிலிருந்து விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக நடத்தப்படுகிறது.

சுகாதார தகவல் மேலாண்மை அமைப்பின் (எச்.எம்.ஐ.எஸ்) தகவல் படி, 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 100 சதவீதம் முழு நோய்த்தடுப்பு இலக்கை அடைந்துள்ளன. அதே நேரத்தில் 17 மாநிலங்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமான தடுப்பூசி இலக்கை அடைந்துள்ளன.

2022 ஆம் ஆண்டில் 416 மாவட்டங்களில் இந்திரதனுஷ் இயக்கத்தின் 4-ம் கட்டம் நடத்தப்பட்டது.

இந்த இந்திரதனுஷ் இயக்கத்தில் தமிழ்நாட்டில் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9,42,766 ஆகும்.  பகுதி அளவு தடுப்பூசி போடப்பட்ட அல்லது தடுப்பூசி போடப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை 1,02,824 ஆகும்.

இந்திரதனுஷ் இயக்கத்தின் 4-ம் கட்டத்தில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு 15,105  குழ்நதைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் திரு எஸ்.பி.பாகெல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

***



(Release ID: 1946890) Visitor Counter : 143


Read this release in: English , Urdu , Telugu