சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்
Posted On:
08 AUG 2023 5:08PM by PIB Chennai
புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (ஐ.ஏ.ஆர்.சி) மற்றும் உலக சுகாதார அமைப்பின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (டபிள்யூஎச்ஓ-எஃப்.ஏ.ஓ) ஆகியவற்றின் கூட்டு நிபுணர் குழு நடத்திய சர்க்கரை அல்லாத இனிப்புகளால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்த ஆய்வில் இவற்றால் புற்றுநோய்க்கு ஓரளவு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. இருப்பினும், தினசரி உட்கொள்ளல் உடல் எடையைப் பொறுத்து ஒரு கிலோ எடைக்கு 40 மில்லி கிராம் வரை உட்கொள்ளலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், ஏற்கெனவே உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஒழுங்குமுறையில் பல்வேறு செயற்கை இனிப்புகளுக்கான தரங்களை வகுத்துள்ளது. கலோரி அல்லாத இனிப்புகளுக்கான இந்த தரநிலைகள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான வரம்புகள், உணவு சேர்க்கைகள் குறித்தகூட்டு உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் திரு எஸ்.பி.பாகெல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
ANU/SM/PLM/KRS
(Release ID: 1946886)
Visitor Counter : 131