தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்ளூர் பகுதிகளில் பணிபுரியும் தினக்கூலித் தொழிலாளர்கள்

Posted On: 07 AUG 2023 4:50PM by PIB Chennai

அமைப்புசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2008ன் படி, (1) உயிர் மற்றும் ஊனமடைதல் பாதுகாப்பு, (2) உடல்நலம் மற்றும் மகப்பேறு சலுகைகள், (3) முதியோர் பாதுகாப்பு மற்றும் (4) மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் வேறு எந்த சலுகைகள் தொடர்பான விஷயங்களில் பொருத்தமான நலத் திட்டங்களை வகுத்து தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவது அரசின் கடமையாகும்.

 

பிரதமரின் ஜீவன் ஜோதி பீம யோஜனா, பிரதமரின்  சுரக்ஷா பீம யோஜனா ஆகியவற்றின் மூலம் ஆயுள் மற்றும் ஊனமுற்றோர்  காப்பீடு வழங்கப்படுகிறது.

 

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் 27 சிறப்பு மருத்துவமனைகளில் 1949 சிகிச்சை நடைமுறைகளுக்கு ஏற்ப இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்குத் தகுதியான குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சுகாதார காப்பீட்டை வழங்குகிறது. இது முற்றிலும் ரொக்கமில்லா மற்றும் காகிதமில்லா திட்டமாகும். 2011 ஆம் ஆண்டின் சமூகபொருளாதார, சாதிக் கணக்கெடுப்பின் (எஸ்..சி.சி) அடிப்படையில் கிராமப்புறங்கள்  மற்றும் நகர்ப்புறங்களில் 11 தொழில் வகைமைகள்  மூலம் இத்திட்டத்தின் பயனாளிக் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

பிரதமரின் ஷ்ரம் யோகி மான்-தன் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 60 வயதை அடைந்த பின் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3,000/-  முதியோர் பாதுகாப்புக்கு வழங்கப்படுகிறது.

 

குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948 இன் கீழ் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குதல் குறைந்தபட்ச ஊதியத்தின் ஒரு பகுதியாக வாழ்க்கைச் செலவுப் படியை வழங்குகிறது. இதன்படி, பணவீக்கத்திலிருந்து குறைந்தபட்ச ஊதியத்தைப் பாதுகாக்க தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 1 வரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் அடிப்படை விகிதங்களில் மாறும் அகவிலைப்படி (வி.டி.) எனப்படும் வாழ்க்கைச் செலவுப் படியை மத்திய அரசு திருத்தி அமைக்கிறது.

 

சமீபத்தில், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948 இன் விதிகள் 2019 ஆம் ஆண்டின் ஊதியக் குறியீட்டின் கீழ் மறுசீரமைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன, மேலும் அதில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தின் கூறுகளும் வாழ்க்கைச் செலவுப் படியை  வழங்குகின்றன. மேலும், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948 இன் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, திட்டமிடப்பட்ட வேலைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை கட்டுப்படுத்துவதில் இருந்து முன்னேறுகிறது.

 

இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி இன்று . மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****

(Release ID: 1946429)

 

SM/SMB/KRS


(Release ID: 1946520) Visitor Counter : 229


Read this release in: English , Urdu , Punjabi