பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
E20 பெட்ரோல்
Posted On:
07 AUG 2023 4:16PM by PIB Chennai
E20 (20% எத்தனால் கலந்த) பெட்ரோல் என்பது 20% நீரற்ற எத்தனால் மற்றும் 80% மோட்டார் பெட்ரோல் எரிபொருள் அளவு ஆகியவற்றின் கலவையாகும். இறக்குமதி சார்புநிலையைக் குறைத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாயிகளுக்கு சிறந்த ஊதியத்தை வழங்குதல், அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் நன்மைகளுக்காக, சிறந்த கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்ற பரந்த நோக்கங்களுடன் அரசு உயிரி எரிபொருளை ஊக்குவித்து வருகிறது. பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (ஓஎம்சி) 6 பிப்ரவரி 2023 முதல் ஈ 20 பெட்ரோல் விற்பனையைத் தொடங்கின, மேலும் இ 20 எரிபொருள் தற்போது நாடு முழுவதும் 1900 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறது. 'இந்தியாவில் எத்தனால் கலப்புக்கான வரைபடம் 2020-25' குறித்த விரிவான அறிக்கை 2025-26 க்குள் இந்தியாவில் 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடைய வழிகாட்டுகிறது.
இத்தகவலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
**
ANU/SM/KPG
(Release ID: 1946506)
Visitor Counter : 462