சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மத்திய சட்ட அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் அமைச்சகங்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டியைத் தொடங்கி வைத்தார்
Posted On:
05 AUG 2023 7:39PM by PIB Chennai
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் ஃபிட் இந்தியா இயக்கம், சட்ட அமைச்சகத்துடன் இணைந்து நடத்தும் அமைச்சகங்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு (Inter-Ministry Bar & Bench Badminton Championship) இடையிலான இரண்டாவது பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை இன்று தொடங்கி வைத்தார். தில்லி தியாகராஜ் விளையாட்டு வளாகத்தில் இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் நமது மகான்கள் மற்றும் முனிவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து கற்பித்துள்ளதாகத் தெரிவித்தார். விளையாட்டின் மூலம் நாம் உடல் திறனுடன் இருக்க முடியும் என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் விகாஸ் சிங், பிரதீப் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆதரவுடன் அமைச்சகங்களுக்கு இடையேயான போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதில் நீதிபதிகள், பல மூத்த வழக்கறிஞர்கள், பிரபலங்கள், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஆடவர் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் 64 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 128 வீரர்கள் பங்கேற்றனர்.
(Release ID:1946094)
***
SM/PLM/KRS
(Release ID: 1946130)
Visitor Counter : 135