உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒடிசாவில் பேரிடர் மேலாண்மை மற்றும் இடதுசாரி தீவிரவாதம் குறித்து ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
05 AUG 2023 4:39PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா இன்று புவனேஸ்வரில் ஒடிசா மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பேரிடர் மேலாண்மை நடைமுறைகள் மற்றும் இடதுசாரி தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் ஒடிசா முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக், மத்திய உள்துறைச் செயலாளர் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பேரிடர் மேலாண்மையில் ஒடிசா மாநிலம் சிறப்பாக செயல்படுவதாக உள்துறை அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். பேரிடர் மேலாண்மையில் ஒடிசாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று திரு அமித் ஷா உறுதியளித்தார்.
ஊர்க்காவல் படை தன்னார்வலர்களின் திறன்களை பலப்படுத்தி, பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். மின்னல், வெப்ப அலை மற்றும் காட்டுத் தீ போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற மாநில நிர்வாகம் நிலையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பேரிடர் காலங்களில் விலங்குகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இடதுசாரி தீவிரவாதம் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர், மாநில அரசின் முயற்சிகளை பாராட்டியதோடு, இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய படைகளின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்த, அனைத்து ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.
***
SM/PLM/DL
(रिलीज़ आईडी: 1946072)
आगंतुक पटल : 183