நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் போதுமான அளவு சர்க்கரை கையிருப்பில் உள்ளது: மத்திய அரசு

Posted On: 04 AUG 2023 6:32PM by PIB Chennai

நாட்டில் சர்க்கரையின் சில்லறை விலை அதிகரிக்காமல்  மத்திய அரசு பராமரித்து வருகிறது. 2023 ஏப்ரல்-மே மாதங்களில் சர்வதேச சர்க்கரை விலைகள் மிக அதிக அளவில் உயர்ந்தபோதும், சர்க்கரையின் உள்நாட்டு விலை பெரிய அளவில் உயரவில்லை.

சர்வதேச சர்க்கரை விலை இந்திய விலையை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகமாக உள்ளது. நாட்டில் சர்க்கரையின் சராசரி சில்லறை விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ. 43 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் சர்க்கரை விலை தொடர்பான ஆண்டு  பணவீக்கம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் விளைவாக உள்நாட்டு சர்க்கரை விலை நிலையானதாக வைக்கப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் அரசின் நடவடிக்கைகள் சர்க்கரைத் துறையை நெருக்கடியில் இருந்து மீட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் சர்க்கரை உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.

ஜூலை 2023 இறுதி நிலவரத்தின் அடிப்படையில், இந்தியாவில் சுமார் 108 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை கையிருப்பு உள்ளது. இது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமானது. உள்நாட்டு நுகர்வோருக்கு ஆண்டு முழுவதும் நியாயமான விலையில் போதுமான சர்க்கரை கிடைக்கும்.

 

சர்க்கரை ஆலைகள் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதன் மூலமும் கரும்பு விவசாயிகளின் நலன்களும். 2021-22 வரையிலான சர்க்கரை பருவங்களுக்கான கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையில் 99.9% ஏற்கனவே சர்க்கரை ஆலைகளால் செலுத்தப்பட்டுள்ளது. நடப்பு 2022-23-ம் ஆண்டுக்கான சர்க்கரைப் பருவத்தில் கூட ரூ.1.05 லட்சம் கோடிக்கு மேல் நிலுவைத்  தொகை செலுத்தப்பட்ட நிலையில், தற்போது வரை சுமார் 93% கரும்பு நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

எனவே, நுகர்வோர், விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகள் ஆகிய மூன்று முக்கிய பங்குதாரர்களின் நலன்களையும் மத்திய அரசு அதன் பொருத்தமான கொள்கைகள், நிலையான விலைகள் மற்றும் விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம் சர்க்கரைத் துறையை மறுசீரமைத்து பாதுகாத்து வருகிறது.

***  

SM/PLM/RS/KRS


(Release ID: 1945938) Visitor Counter : 145


Read this release in: English , Urdu , Hindi , Marathi , Odia