பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் படைவீரர்கள் நலன்

Posted On: 04 AUG 2023 2:02PM by PIB Chennai

நாட்டில் முன்னாள் படைவீரர்கள் / அவர்களின் மனைவியர் மற்றும்   அவர்களைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு  நலத்திட்டங்கள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள், நிதி உதவி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் படைவீரர் நல நிதியின் கீழ் ஆயுதப்படை கொடி நாள் நிதியிலிருந்து உதவிகள் வழங்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கு கல்வி மானியம், ஊனமுற்ற குழந்தைகள் மானியம், மகளின் திருமண நிதியுதவி (இரண்டு மகள்கள் வரை), கணவரை இழந்த பெண்களுக்கு மறுமண நிதியுதவி, மருத்துவ சிகிச்சை மானியம், ஆதரவற்றோர் மானியம், தொழிற்கல்வி மானியம், அனைத்து நிலைகளிலும் ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு ஏ.எஃப்.எஃப்.டி நிதியிலிருந்து கடுமையான நோய்கள் மானியம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மாற்றியமைக்கப்பட்ட ஸ்கூட்டர் மானியம், வீட்டுக் கடனுக்கான மானியம், பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம், மருத்துவப் / பல் மருத்துவக் கல்லூரிகளில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மத்திய அரசின் சார்பில்  இடங்கள் ஒதுக்கீடு, ரயில் பயண சலுகை அடையாள அட்டைகள், முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு நலத் திட்டம், மீள்குடியேற்ற பொது இயக்குநரகத்தால் (டி.ஜி.ஆர்) செயல்படுத்தப்படும் பல்வேறு மீள்குடியேற்றத் திட்டங்கள் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இத்தகவலை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

      **

ANU/SM/PKV/KPG


(Release ID: 1945905)
Read this release in: English , Urdu , Hindi