பாதுகாப்பு அமைச்சகம்
பரஸ்பர ஒப்பந்தம்
Posted On:
04 AUG 2023 2:04PM by PIB Chennai
அமெரிக்க கப்பல் கட்டும் தளங்களில் இந்தியக் கப்பல்களைப் பழுதுபார்க்க அனுமதிப்பதற்கு பரஸ்பர உடன்பாடு மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்தம் எதுவும் இல்லை. இருப்பினும், அமெரிக்க கடற்படை கப்பல்களின் பயண பழுதுபார்ப்புகளுக்காக லார்சன் & டூப்ரோ (எல் & டி) கப்பல் கட்டும் காட்டுப்பள்ளி தளம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏப்ரல் 04, 2023 அன்று மாஸ்டர் ஷிப்யார்ட் பழுதுபார்ப்பு ஒப்பந்தம் (எம்.எஸ்.ஆர்.ஏ) கையெழுத்தானது. மசாகான் டாக்ஸ் லிமிடெட் மற்றும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் ஆகியவற்றுடன் எம்.எஸ்.ஆர்.ஏ மேம்பட்ட கட்டத்தில் உள்ளது. அமெரிக்க கடற்படைக்கான கப்பல் பழுதுபார்க்கும் திட்டங்களை மேற்கொள்வதற்கு போட்டியிட எம்.எஸ்.ஆர்.ஏ ஒரு கப்பல் கட்டும் தளத்தை தகுதிப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் அல்லது தேவைக்கேற்ப மறுஆய்வு செய்யப்படுகிறது.
இந்தக் கப்பல்களின் பழுதுபார்ப்புகளை மேற்கொள்வது இந்திய கப்பல் கட்டுநர்களின் வணிக நலனுக்கு உதவுகிறது, மேலும் இது போன்ற அதிக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். ஒரு அமெரிக்க கடற்படை கப்பல் அதன் பழுதுபார்க்கும் காலத்திற்கு இந்திய கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்படும்.
இத்தகவலை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
**
ANU/SM/PKV/KPG
(Release ID: 1945888)
Visitor Counter : 148