உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மக்களவையில் இன்று தில்லி தேசிய தலைநகரப் பகுதி (திருத்த) மசோதா - 2023 மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசினார்
இந்த மசோதா முற்றிலும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது - தில்லி மக்களின் நலனுக்காக மட்டுமே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது – இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை: உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
03 AUG 2023 9:11PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மக்களவையில் இன்று (03-08-2023) தில்லி தேசிய தலைநகரப் பகுதி (திருத்த) மசோதா - 2023 மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசினார். பின்னர் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய திரு அமித் ஷா, எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்..
மணிப்பூர் குறித்து அவையில் விவாதிக்க அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், எல்லாவற்றிற்கும் பதிலளிக்க தானும் தயாராக இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார். எதிர்க்கட்சிகள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்புவதாகத் தெரிவித்த அவர், ஆனால் மக்களுக்கு எல்லாம் தெரியும் என்று கூறினார். மக்களை தவறாக வழிநடத்தும் இடம் இந்த அவை அல்ல என்று திரு அமித் ஷா கூறினார்.
சட்டப் பிரிவு 239 (ஏஏ) (3) (பி)-ன் கீழ், தில்லி யூனியன் பிரதேசம் அல்லது அதன் எந்தப் பகுதி தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று அவர் கூறினார். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டவுடன், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து விட்டதாகவும் மணிப்பூர் உள்ளிட்ட விஷயங்களை அவை மறந்துவிட்டதாகவும் திரு அமித்ஷா கூறினார்.
இந்த மசோதா முற்றிலும் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும், தில்லி மக்களின் நலனுக்காக மட்டுமே இது கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதன் பின்னணியில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா விளக்கம் அளித்தார்.
****
SM/PLM/KRS
(Release ID: 1945637)
Visitor Counter : 196