ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள்

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2023 3:38PM by PIB Chennai

2019 ஆகஸ்ட் முதல், ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்காக உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து நீர்வள இயக்கம்  - இல்லம் தோறும் குடிநீர் ஆகியவற்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நீர்வள இயக்கம்  தொடங்கப்பட்டதிலிருந்து குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் கூடுதலாக 9.45 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.  31.07.2023 நிலவரப்படி, நாட்டில் உள்ள 19.42 கோடி கிராமப்புற வீடுகளில், 12.69 கோடி (65.33%) கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

****

(Release ID:1945408)

ANU/AD/IR/KPG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1945618) வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu