நிதி அமைச்சகம்
51-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள்
Posted On:
02 AUG 2023 7:56PM by PIB Chennai
மத்தியநிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் 51 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று புதுதில்லியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, மாநிலங்கள் மற்றும் சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், நிதித்துறை மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகளள் கலந்துகொண்டனர்.
11.07.2023 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வதுகூட்டத்தில் சூதாட்டங்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் குறித்த அமைச்சர்கள் குழுவின் (ஜிஓஎம்) இரண்டாவது அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. சூதாட்டங்கள், குதிரைப் பந்தயம், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்கக்கூடிய உரிமைகோரல்களுக்கு முழு முக மதிப்பில் 28% வரி விதிக்கலாம் என்று இக்குழு பரிந்துரைத்தது. திறமைக்கான விளையாட்டா அல்லது விருப்பப்பட்ட விளையாட்டா என்பதைப் பொருட்படுத்தாமல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம் என்றும் கவுன்சில் பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி, ஜி.எஸ்.டி கவுன்சில் தனது 51 வது கூட்டத்தில், சூதாட்டங்கள், குதிரைபந்தயம், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றிற்கு வரிவிதிப்பு குறித்து தெளிவுபடுத்துவதற்காக சி.ஜி.எஸ்.டி சட்டம், 2017-ன் அட்டவணை 3-ல் திருத்தம் உட்பட சி.ஜி.எஸ்.டி சட்டம் 2017, ஐ.ஜி.எஸ்.டி சட்டம் 2017 ஆகியவற்றில் சில திருத்தங்களை பரிந்துரைத்தது. ஐ.ஜி.எஸ்.டி சட்டம், 2017-ல் ஒரு குறிப்பிட்ட விதியை சேர்க்க கவுன்சில் பரிந்துரைத்தது. இது இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரு சப்ளையர் இந்தியாவில் உள்ள ஒரு நபருக்கு ஆன்லைன் பண கேமிங்கை வழங்குவதில் ஜிஎஸ்டி செலுத்துவதற்கும் பரிந்துரை செய்தது. பதிவு செய்தல் மற்றும் வரி செலுத்துதல் விதிகளுக்கு இணங்கத் தவறினால், அத்தகைய வழங்குநரால் ஆன்லைன் பண கேமிங்கை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் எந்தவொரு கணினிப் பொறியிலும் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட அல்லது ஆதரவளிக்கப்பட்ட அதனை முடக்குவதற்கும் பரிந்துரை செய்துள்ளது..
ஆன்லைன் கேமிங் வழங்கலை மதிப்பிடுவதற்கும் அதற்கேற்ப சூதாட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடிய உரிமைகோரல்களை வழங்குவதற்கும் குறிப்பிட்ட விதிகளை சேர்க்க சிஜிஎஸ்டி விதிகள், 2017 திருத்தப்படலாம் என்று கவுன்சில் பரிந்துரைத்தது. இந்த விவகாரம் தொடர்பான அறிவிப்பில் சில அறிவிப்புகள் / திருத்தங்களை வெளியிடவும் கவுன்சில் பரிந்துரைத்தது.
சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கான நடைமுறையை விரைவாக முடித்து, 2023அக்டோபர்1 முதல் திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் கவுன்சில் முடிவு செய்தது.
குறிப்பு:ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் பங்குதாரர்களின் தகவல்களுக்காக எளிய மொழியில் முக்கிய முடிவுகளைக் கொண்ட இந்த வெளியீட்டில் வழங்கப்பட்டுள்ளன. உரிய சுற்றறிக்கைகள்/ அறிவிக்கைகள்/ சட்டத் திருத்தங்கள் மூலம் இது நடைமுறைக்கு வரும்.
(Release ID: 1945208)
****
ANU/SMB/KRS
(Release ID: 1945266)
Visitor Counter : 383