சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்

இடுகை இடப்பட்ட நாள்: 02 AUG 2023 4:04PM by PIB Chennai

அதிக வேகம், மொபைல் போன் பயன்படுத்துதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தாதது போன்ற பல காரணங்களால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, 2019 முதல் 2021 வரையிலான ஆண்டுகளில்  நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதி மீறல் காரணமாக சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:-

போக்குவரத்து விதி மீறல்

விபத்துக்களின் எண்ணிக்கை

இறந்தவர்களின் எண்ணிக்கை

2019

2020

2021

2019

2020

2021

அதிக வேகம்

98294

85616

95785

36566

32873

40450

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்

5122

3416

2949

2376

1862

1352

தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல்

7076

6050

5568

2726

3099

2823

சிக்னலை மதிக்காமல் செல்லுதல்

984

919

555

266

476

222

மொபைல் ஃபோன் பயன்பாடு

3660

2697

1997

1585

1389

1040

மற்ற விதிமீறல்கள்

22055

16753

21971

10353

7971

10120

மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன (திருத்த) சட்டம், 2019 மூலம் இது திருத்தப்பட்டது, இதன் மூலம் ஏற்கனவே இருந்த  அபராதங்கள் அதிகரிக்கப்பட்டன.

இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

AP/ANU/PLM/RS/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1945202) வருகையாளர் எண்ணிக்கை : 287
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu