ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தயாரிக்க ரூ.1343.72 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 02 AUG 2023 4:58PM by PIB Chennai

பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வே பின்வரும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளைக் கொண்ட நவீன பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:

  • கவாச் பொருத்தப்பட்டுள்ளது.
  • 160 கிலோ மீட்டர் வரை வேகம் மற்றும் அரை அதிவேக செயல்பாடு.
  • தானியங்கி பிளக் கதவுகள்
  • வசதியான இருக்கைகள்.
  • சிறந்த பயண அனுபவம்.
  • ஒவ்வொரு இருக்கைக்கும் மொபைல் சார்ஜிங் வசதி.
  • ஹாட் கேஸ், பாட்டில் கூலர், டீப் ஃப்ரீசர் மற்றும் ஹாட் வாட்டர் பாய்லர் வசதிகளுடன் கூடிய மினி பேன்ட்ரி
  • சிறந் விளக்கு வசதிகள்.
  • மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு சிறப்பு கழிவறை.
  • ஒவ்வொரு பெட்டியிலும் அவசரகால ஜன்னல் மற்றும் தீ அணைப்பான்
  • அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி
  • அனைத்து ரயில் பெட்டிகளிலும் அவசரகால அலாரம்
  • சிறந்த தீ பாதுகாப்பு நடைமுறைகள்
  • ரிமோட் கண்காணிப்புடன் கூடிய பெட்டி கண்காணிப்பு முறை (சி.சி.எம்.எஸ்)
  • வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ரூ.1343.72 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 28, 2023 நிலவரப்படி, ரயில்வேயில் 50 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. அதிவேகம், மேம்பட்ட பாதுகாப்பு தரம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த சேவை ஆகியவை இந்த ரயில்களின் முக்கிய  அடையாளங்களாகும்.

ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.

***

AP/ANU/PLM/RS/KPG


(रिलीज़ आईडी: 1945201) आगंतुक पटल : 253
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu