ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுதல்

Posted On: 02 AUG 2023 5:04PM by PIB Chennai

ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய, ஏற்கனவே உள்ள ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படுகிறது. அத்துடன்  சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புதிய ரயில்களும், அறிமுகப்படுத்தப்படுகின்றன.

முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணச்சீட்டுதானாகவே ரத்து செய்யப்பட்டு, ஆட்டோ ரீஃபண்ட் எனப்படும் திருப்பிச் செலுத்துதல் நடைமுறையின் மூலம்  வங்கிக் கணக்கிற்கு பணம் திரும்பச் செலுத்தப்படுகிறது.

பணம் எடுக்கப்பட்டு முன்பதிவு செய்யப்படாவிட்டால், ஐ.ஆர்.சி.டி.சி மறுநாள் தானியங்கி முறையில் பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையைத் தொடங்குகிறது. பொதுவாகபின்வரும் பரிவர்த்தனை முறையின்படி பணம்  திரும்பப் பெறுவதற்கான கால அளவு அமையும்.

· நெட் பேங்க்கிங் / வாலட் / கேஷ் அட்டைப் பரிவர்த்தனைகளுக்கு 3 முதல் 4 வேலை நாட்கள்.

· கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 6 முதல் 7 வேலை நாட்கள்.

ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

--------

AP/ANU/PLM/RS/KPG


(Release ID: 1945200) Visitor Counter : 158
Read this release in: English , Urdu , Telugu