உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்களை மையமாகக் கொண்ட காவல் சேவைகளை வழங்குவதற்கான இணைய தளம்

Posted On: 02 AUG 2023 4:28PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாக வரம்புக்குட்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 21 ஆகஸ்ட் 2017 அன்று டிஜிட்டல் போலீஸ் இணையதளத்தை (https://digitalpolice.gov.in) அறிமுகப்படுத்தியது. இது தேசிய அளவில் பின்வரும் மக்கள் சேவைகளை வழங்குகிறது:-

  1. காணாமல் போனோரைத் தேடும் பணி
  2. வாகன தடையில்லா சான்றிதழ் உருவாக்கம்
  3. அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்த தகவல்
  4. அருகிலுள்ள காவல் நிலையத்தை கண்டறிதல்

மாநில காவல்துறைகளின் பின்வரும் 9 மக்கள் சேவைகளை டிஜிட்டல் போலீஸ் தளம் வழியாகவும் அணுகலாம்:-

  1. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் முறையிடுதல்
  2. முறையீடுகளின்  நிலை
  3. எஃப்.ஐ.ஆர் நகல்களைப் பெறுதல்
  4. கைது செய்யப்பட்டவர்கள்/ தேடப்படும் குற்றவாளிகள் விவரம்
  5. காணாமல் போனவர்கள்/ கடத்தப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள்
  6. திருடப்பட்ட / மீட்கப்பட்ட வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் பிற சொத்துக்களின் விவரங்கள்
  7. பல்வேறு தடையில்லா சான்றிதழ்களை வழங்குதல் / புதுப்பித்தல்
  8. ஊழியர்களுக்கான சரிபார்ப்பு கோரிக்கைகள், வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட், மூத்த குடிமக்கள் பதிவுகள் போன்றவை
  9. தகவல்களைப் பகிர்வதற்கும் மக்களுக்கு தேவையான படிவங்களைப் பதிவிறக்கம் செய்வதற்குமான தளம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் உட்பட அனைத்து வகையான இணையதள  குற்றங்களையும் https://cybercrime.gov.in என்ற தளத்தின் மூலம் புகார் அளிக்கும் வசதியை  உள்துறை அமைச்சகம் 30 ஆகஸ்ட் 2019 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த சேவைகளை அணுகலாம்..

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு அஜய் குமார் மிஸ்ரா இதனைத் தெரிவித்துள்ளார்.


***

AP/ANU/PLM/RS/KPG


(Release ID: 1945189) Visitor Counter : 152
Read this release in: English , Urdu , Telugu , Malayalam