குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஆகஸ்ட் 4, 2023 அன்று குடியரசு துணைத் தலைவர் நாக்பூர் வருகை


ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு

Posted On: 02 AUG 2023 3:15PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தங்கர் ஆகஸ்ட் 4, 2023 அன்று நாக்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் (ஆர்.டி.எம்.என்.யூ) நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

தனது பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர் ரேஷ்மிபாக்கில் உள்ள கவிவர்யா சுரேஷ் பட் கலாச்சார கலையரங்கத்தைப் பார்வையிடுகிறார்.

பின்னர், தேசிய நேரடி வரிகள் அகாடமியில் இந்திய வருவாய் சேவை பயிற்சியாளர்களுக்கான 'பிரணீதி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடியரசு துணைத்தலைவர் தொடக்க உரையை ஆற்றுவார்.

                  ----

ANU/AP/KPG



(Release ID: 1945085) Visitor Counter : 121