சுரங்கங்கள் அமைச்சகம்
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு முக்கிய கனிமங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது
Posted On:
02 AUG 2023 2:25PM by PIB Chennai
கனிமப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகளின் (எம்.சி.டி.ஆர்) கீழ் முக்கிய கனிமங்களின் உற்பத்தி கடந்த ஒன்பது ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2014-15 மற்றும் 2022-23 காலகட்டத்தில் இந்த கனிமங்களின் உற்பத்தி அளவு கீழ்க்கண்ட பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் (என்.எம்.இ.டி) செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் தொழில்நுட்ப மற்றும் செலவினக் குழுவின் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது, மேலும் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைவுபடுத்துவதற்கு நிர்வாகக் குழுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
பணிகளின் முன்னேற்றத்தை கண்காணித்து ஆய்வு செய்யவும், ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவற்றைத் தீர்க்கவும் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
2014-15 மற்றும் 2022-23 காலகட்டத்தில் முக்கிய கனிமங்களின் உற்பத்தி
கனிமப் பெயர்
|
|
உற்பத்தி அளவு (மில்லியன் மெட்ரிக் டன்)
|
2014-15 |
2022-23 (முதல் கட்ட தகவல்)
|
இரும்புத் தாது
|
129.32 |
257.86
|
சுண்ணாம்புக் கல்
|
293.27 |
406.16
|
குரோமைட்
|
2.16 |
3.56
|
தங்கத் தாது
|
0.45 |
0.63
|
ஈயம் மற்றும் துத்தநாக தாது
|
9.36 |
16.74
|
பாக்சைட்
|
22.49 |
23.84
|
ஈய செறிவு
|
0.20
|
0.38
|
மாங்கனீசு தாது
|
2.37
|
2.83
|
துத்தநாகச் செறிவு
|
1.49
|
1.67
|
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/AP/PLM/RS/KPG
(Release ID: 1945066)
Visitor Counter : 129