சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பார்வையிழப்பு மற்றும் பார்வைக் குறைபாடுகளுக்கான தேசிய திட்டம் பற்றிய அண்மை தகவல்

Posted On: 01 AUG 2023 2:20PM by PIB Chennai

பார்வையிழப்பு மற்றும் பார்வைக் குறைபாடுகளைக் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திற்கும், யூனியன் பிரதேசத்திற்கும் வருடாந்திர இலக்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் தகுதிவாய்ந்த கண்புரை வழக்குகளை நிவர்த்தி செய்வதற்காக  கண்புரை அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.  2022-23 நிதியாண்டில், 75,00,000 கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் தவிர்க்கக்கூடிய பார்வைக் குறைபாட்டு பரவலை 0.25% ஆக குறைக்க எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

வழக்கமான தகவல் தொடர்பு நடவடிக்கைகள் / விழிப்புணர்வு இயக்கங்கள் ஆகியவை பார்வையிழப்பு மற்றும் பார்வைக் குறைபாடுகளைக் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும், உலக கண் கிளாக்கோமா வாரம், கண்தான இருவாரம் மற்றும் உலக பார்வை தினம் ஆகிய நாட்களில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் முக்கிய தகவல் தொடர்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

ANU/PKV/GK



(Release ID: 1944820) Visitor Counter : 92


Read this release in: English , Urdu , Telugu