உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

விமான பாதுகாப்பு கலாச்சார வார நிகழ்ச்சிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 31 JUL 2023 4:32PM by PIB Chennai

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் (எம்ஓசிஏ) கீழ் செயல்படும் சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) புதுதில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் விமானப் பாதுகாப்பு கலாச்சார வாரத்தை தொடங்கியுள்ளது. இது 2023 ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீடிக்கும். 'விமானப் பாதுகாப்பு கலாச்சார வாரத்தின்' கருப்பொருள் "பாருங்கள், சொல்லுங்கள்,  பாதுகாக்கும் முயற்சியைச் செய்யுங்கள்" (See it, Say it, Secure it) என்பதாகும்.

 

இது தொடர்பாக பிசிஏஎஸ் தலைமை இயக்குநர் திரு சுல்பிகர் ஹசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பயணத்தின் போது பயணிகள் எடுத்துச் செல்லக்கூடாத தடைசெய்யப்பட்ட பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த விமானப் பாதுகாப்பு கலாச்சார வார  நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்றார்.

 

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் உடல் ஆய்வுக் கருவிகளை (பாடி ஸ்கேனர்) படிப்படியாக அறிமுகப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பல்வேறு விமான நிலையங்களில் பாதுகாப்புத் திறனை அதிகரிப்பதன் மூலம் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் பயணிகள் சுமூகமான பயணத்தை மேற்கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்தியாவின் 131 விமான நிலையங்கள் வழியாக தினசரி சராசரியாக 10 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் சுமார் 11,000 சோதனையாளர்கள் (ஸ்கிரீனர்கள்) பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 5 லட்சம் பயணிகளையும் 9 லட்சம் கைப்பைகளையும் பரிசோதிக்கின்றனர்.

 

ஏவியேஷன் செக்யூரிட்டி வீக் எனப்படும் இந்த விமானப் பயண பாதுகாப்புக் கலாச்சார வாரத்தின்' போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிசிஏஎஸ் திட்டமிட்டுள்ளது:

****
 

ANU/PLM/KRS



(Release ID: 1944505) Visitor Counter : 102


Read this release in: Urdu , English , Telugu