மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து சூழலுக்கான அடிப்படை வசதிகள் குறித்த வழிகாட்டுதல்களை யுஜிசி உருவாக்கியுள்ளது
Posted On:
31 JUL 2023 3:59PM by PIB Chennai
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக மாணவிகளுக்கு பாதுகாப்பான, பந்தோபஸ்தான மற்றும் வன்முறையற்ற சூழலை ஏற்படுத்துவதற்காக உயர்கல்வி நிறுவனங்களில் (எச்.இ.ஐ) பெண்களுக்கும், மகளிர் பிரிவுக்கும் (கூருணர்வு, கொள்கை அமலாக்கம், கண்காணிப்பு மற்றும் குறை தீர்ப்பு) அடிப்படை வசதிகள் குறித்த வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் www.ugc.gov.in என்ற யுஜிசி இணையதளத்தில் உள்ளன.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013-ன் பிரிவு 4 விதியின் கீழ் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் உள் புகார் குழுவை (ஐ.சி.சி) வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை பராமரிப்பது தொடர்பான பிரச்சினையை உணரும் வகையில், நடவடிக்கை எடுப்பதற்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஊழியர்கள் உட்பட அனைத்துப் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், உயர்கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்கவும், பின்வரும் முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன:-
- யுஜிசி (உயர்கல்வி நிறுவனங்களில் பெண் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுத்தல், தடுத்தல் மற்றும் நிவர்த்தி செய்தல்) ஒழுங்குமுறைகள், 2015-ஐ அறிவித்துள்ளது. இந்த ஒழுங்குமுறை www.ugc.gov.in என்ற யுஜிசி இணையதளத்தில் கிடைக்கிறது.
ii. பெண்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்காக யுஜிசி 1800-111-656 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அமைத்துள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் பாலின உணர்திறனுக்காக கருத்தரங்குகள் / விழிப்புணர்வு பயிலரங்குகள் போன்றவை நடத்தப்படுகின்றன.
அனைத்துப் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள், பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் குறித்த வருடாந்திர அறிக்கைகளின் தரவுகளை சமர்ப்பிக்கவும், உள் புகார் குழுவை அமைக்கவும், சாக்ஷம் வலைதளத்தில் பாலின தணிக்கையின் ஆன்லைன் இணக்கத்தை பூர்த்தி செய்யவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இத்தகவலை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
ANU/AP/SMB/AG
(Release ID: 1944404)
Visitor Counter : 109