குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடையே உள்ள திறன் குறைபாடுகளைக் குறைத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2023 4:00PM by PIB Chennai
நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் திறன் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் திட்டம், தொழில்நுட்ப மைய அமைப்புகள் திட்டம், பயிற்சி நிறுவனங்களுக்கு உதவித் திட்டம், தேசிய பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மையத் திட்டம், கயிறு விகாஸ் யோஜனா திட்டம், தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம், புத்தாக்கத் திட்டம், ஊரகத் தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் ஊக்குவிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பயிற்சிக்காக செயல்படுத்தப்படுகின்றன.
உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப அனைத்துப் திறன் படிப்புகளும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
********
ANU/PLM/AG
(வெளியீட்டு அடையாள எண்: 1944402)
வருகையாளர் எண்ணிக்கை : 119