குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பெண்களின் பங்கேற்பு

Posted On: 31 JUL 2023 4:02PM by PIB Chennai

பெண்களிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. பாரம்பரிய கைவினைஞர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் கடனுடன் கூடிய மானியத் திட்டமான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தை இந்த அமைச்சகம் செயல்படுத்துகிறது.

இதில் பெண் தொழில் முனைவோருக்கு, அதிக மானியம் வழங்கப்படுகிறது. மகிளா கயிறு யோஜனா திட்டத்தின் கீழ், கயிறு தொடர்பான தொழிலில் உள்ள பெண் கைவினைஞர்களுக்கு அமைச்சகம் பயிற்சி அளிக்கிறது. அத்துடன் இத்திட்டத்தின் நன்மைகளைப் பயன்படுத்தி சொந்தமாக குறுந்தொழில்களை தொடங்க ஊக்குவிக்கிறது.

குறு, மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை பெண் தொழில்முனைவோருக்கு கடன் உத்தரவாதத்தின் அளவை 85 சதவீதமான உயர்த்தியுள்ளது.  பொது கொள்முதல் கொள்கையில் ஒரு திருத்தத்தின் மூலம், அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர கொள்முதலில் குறைந்தது 3 சதவீதத்தை பெண்களுக்கு சொந்தமான குறு மற்றும் சிறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.

 

பெண்கள் உட்பட அனைத்து தொழில்முனைவோருக்கும், மத்திய அரசின் முன்முயற்சியான அடல் இன்னோவேஷன் இயக்கம் (ஏஐஎம்), அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், அடல் தொழில் காப்பக மையங்கள் மற்றும் அடல் சமூக கண்டுபிடிப்பு மையங்கள் மூலம் நாட்டின் இளைஞர்களிடையே கண்டுபிடிப்பு மன நிலை வளர்க்கப்படுறது. ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்டார்ட் அப் கிராம தொழில்முனைவோர் திட்டம் ஆகியவை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மைக்ரோ யூனிட்டுகளை அமைப்பதில் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இத்தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

                                            ********

ANU/PLM/KPG

 


(Release ID: 1944397) Visitor Counter : 125