குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்எஸ்எம்இ அட்டை

Posted On: 31 JUL 2023 4:03PM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகத்துடன் (என்பிசிஐ) இணைந்து, உதயம் தளத்தில் பதிவு செய்துள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) எம்எஸ்எம்இ ரூபே கடன் அட்டையை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியது.

எம்எஸ்எம்இ ரூபே கடன் அட்டை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள், பயன்பாட்டு கட்டணப் பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல் நடைமுறைகள் போன்ற வணிகம் தொடர்பான செயல்பாட்டுச் செலவுகளை மேற்கொள்ள எளிமையான கட்டண முறையை வழங்குகிறது. அத்துடன், கடன் வாங்குபவர்கள் வங்கிக் கொள்கையின்படி தங்கள் வணிக செலவுகளுக்கு வட்டியில்லா கடன் காலம் தொடர்பான நன்மையைப்  பெறுகிறார்கள்.

இத்தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

      

********

ANU/PLM/AG




(Release ID: 1944396) Visitor Counter : 126


Read this release in: English , Urdu , Telugu