புவி அறிவியல் அமைச்சகம்

வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையில் தனியார் துறையின் பங்களிப்பு

Posted On: 27 JUL 2023 3:45PM by PIB Chennai

ஆர்.ஏ.2 எனப்படும் ஆசிய மண்டல ஒருங்கிணைப்பு பிராந்தியத்தில் புயல் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், மழைப்பொழிவை கணிப்பதற்கான நவ்காஸ்ட் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் செப்டம்பர் -2021-ல் கூகிள் ஆசியா பிரைவேட் லிமிடெட் உடன் இந்திய வானிலை ஆய்வு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

 

   இது தவிர,

 

•          வேளாண் சேவைகள் தொடர்பான முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை செய்திகளைப் பகிர்வதற்காக, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டு செயல்பாடுகள் நடைமுறையில் உள்ளது.

 

•          உள்நாட்டு ரேடார்களை உருவாக்க, தனியார் துறையின் உதவி பெறப்படுகிறது.

 

•          இடி மற்றும் மின்னல் தொடர்பான வானிலை முன்னறிவிப்பு சேவைகளுக்காக, இந்திய வானிலை ஆய்வு மையம் காலநிலை நெகிழ்திறன் கண்காணிப்பு நடைமுறை ஊக்குவிப்பு கவுன்சிலுடன் (க்ரோப் - CROPC) இணைந்து செயல்படுகிறது.

 

•          பல்வேறு வானிலை சேவைகளின் வளர்ச்சிக்கு ஆதரவை வழங்குவதற்காக, இந்திய புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன.

 

இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***
 

ANU/PLM/KRS



(Release ID: 1943462) Visitor Counter : 89