புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெப்ப அலைகளால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளன

Posted On: 27 JUL 2023 3:46PM by PIB Chennai

சமீபத்திய ஆண்டுகளில் வெப்ப அலைகளால் ஏற்படும் இறப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இருப்பினும், 2023 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களை உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி) இன்னும் வெளியிடவில்லை.

 

உலகளவில் வருடாந்திர வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பிரதிபலிக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைகள் உள்ளிட்ட கடுமையான வானிலை நிகழ்வுகள் தொடர்பான முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை வெவ்வேறு இடம்சார்ந்த மற்றும் தற்காலிக அளவீடுகளில் வெளியிடுகிறது.

 

நாட்டில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலை காணப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறையுடன் இணைந்து வெப்ப அலைகளைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கவும், அத்தகைய சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தவும் நாட்டின் பல பகுதிகளில் வெப்ப செயல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 

 

இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****
 

ANU/PLM/KRS

 

(Release ID: 1943460) Visitor Counter : 147


Read this release in: English , Urdu