புவி அறிவியல் அமைச்சகம்
அதிகரித்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகள்
Posted On:
27 JUL 2023 3:46PM by PIB Chennai
பல நாடுகளைப் போலவே, இந்தியாவும் பருநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிப்பதன் மூலம் இது தெரிகிறது,
இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தாக்க அடிப்படையிலான முன்னறிவிப்பை (ஐபிஎஃப்) வெளியிடத் தொடங்கியது. இது வானிலை எப்படி இருக்கும் என்பதை விட அந்த வானிலையால் என்ன தாக்கம் ஏற்படும் என்பதற்கான விவரங்களை வழங்குகிறது. இதில் கடுமையான வானிலை சூழல்களிலின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை, நவ்காஸ்ட் எனப்படும் தற்போதைய தகவல், நகர முன்னறிவிப்பு, மழை தகவல், சுற்றுலா முன்னறிவிப்பு, எச்சரிக்கைகள் மற்றும் புயல் முன்னறிவிப்பு ஆகிய ஏழு சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 'உமாங்' மொபைல் செயலியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், வானிலை முன்னறிவிப்புக்காக 'மௌசம்', அக்ரோமெட் ஆலோசனைக்காக 'மேக்தூத்', மின்னல் எச்சரிக்கைக்காக 'தாமினி' ஆகிய மொபைல் செயலிகளை இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கியுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து தயார்நிலைக்கான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டு, புயல், வெப்ப அலை, இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு முழுமைக்கும் தேவையான எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்கூட்டியே வழங்குகிறது.
2022-ம் ஆண்டில் 5 புயல்கள், 2 தீவிர புயல்கள் உருவாகின. 2-22 ம் ஆண்டில் தென் மேற்குப் பருவமழைக் காலத்தில் 1875 கழ மழை நிகழ்வுகளும் 296 அதீத கன மழை நிகழ்வுகளும் பதிவாகின.
இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
****
ANU/PLM/KRS
(Release ID: 1943456)