வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

இரண்டாம் கட்ட அம்ருத் இயக்கத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகள்

Posted On: 27 JUL 2023 4:04PM by PIB Chennai

அடல் மறுமலர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான இயக்கத்தின் இரண்டாம் கட்டம் (அம்ருத் 2.0) 2021 அக்டோபர் 1 அன்று தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட அம்ருத் இயக்கம் நகரங்களை 'தற்சார்பு' மற்றும் 'நீர்ப் பாதுகாப்பு' கொண்டவைகளாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. அம்ருத் 2.0 திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கம், 500 நகரங்களில் கழிவுநீர் மேலாண்மையை உலகளாவிய அளவில் மேம்படுத்துதல் ஆகும். இதில் 2.68 கோடி குழாய் இணைப்புகள் மற்றும் 2.64 கோடி கழிவுநீர் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த நீர் செயல் திட்டங்களின் கீழ் ரூ. 91,557 கோடி மதிப்புள்ள 3,126 நீர் வழங்கல் திட்டங்கள்  மற்றும் ரூ. 44,788 கோடி மதிப்புள்ள 501 கழிவுநீர் மேலாண்மை திட்டங்களுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அம்ருத் 2.0 க்கான தரவரிசை கட்டமைப்பு நகரங்களின் முன்னேற்றத்தை தரவரிசைப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு கெளஷல் கிஷோர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

***

ANU/PLM/KPG

 



(Release ID: 1943425) Visitor Counter : 74


Read this release in: English , Urdu , Telugu