வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதி பெறுவதற்கான அளவுருக்கள்

प्रविष्टि तिथि: 27 JUL 2023 4:04PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 25.06.2015 முதல் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 'அனைவருக்கும் வீடு' இயக்கத்தின் கீழ் தகுதியான அனைத்து நகர்ப்புற பயனாளிகளுக்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய 'பக்கா' வீட்டை வழங்க மத்திய அரசு  மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு துணைபுரிகிறது. 10.07.2023 நிலவரப்படி, பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 118.90 லட்சம் வீடுகளில், 112.22 லட்சம் வீடுகளுக்கான  கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன; இதில் 75.31 இலட்சம் பணிகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

முன்பு 31.03.2022 வரை இருந்த திட்டக் காலம், பின்னர் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடனுடன் கூடிய மானியத் திட்டப் பிரிவைத் தவிர, அனுமதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் நிதி முறை மற்றும் செயல்படுத்தும் முறையை மாற்றாமல் முடிக்க வேண்டும்.

இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் கவுஷல் கிஷோர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

----

 

ANU/PKV/KPG


(रिलीज़ आईडी: 1943411) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu