சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகுதல்

Posted On: 27 JUL 2023 3:42PM by PIB Chennai

பிளாஸ்டிக் கழிவுகள் நில மற்றும் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள்- 2016, நாடு முழுவதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை வழங்குகிறது. நிலம், நீர்வாழ் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் குப்பை கொட்டப்படும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பாதகமான விளைவைக் கருத்தில் கொண்டு, சுற்றுச் சூழல்துறை அமைச்சகம் 2021 ஆகஸ்ட் 12 அன்று பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகள்-2021 ஐ அறிவித்தது.

இதன்படி ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் 2022 ஜூலை 1 முதல் தடை செய்யப்பட்டது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகள், 2022-ன் படி பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான உற்பத்தியாளர் பொறுப்பு குறித்த வழிகாட்டுதல்களை 16 பிப்ரவரி 2022 அன்று அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் உருவான பிளாஸ்டிக் கழிவுகள்:

2018-19 - 3,360,043 டன்

2019-20 - 3,469,780 டன்

2020-21 - 4,126,997 டன்

இத்தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் செளபே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.   

----

ANU/PLM/KPG



(Release ID: 1943357) Visitor Counter : 114


Read this release in: English , Urdu , Marathi