வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நிலையான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள்
Posted On:
27 JUL 2023 4:05PM by PIB Chennai
கட்டுமானத் துறையில் புதிய மற்றும் வளர்ந்து வரும் கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் உலகளாவிய வீட்டுவசதி தொழில்நுட்ப சவால் - இந்தியா (ஜி.எச்.டி.சி-இந்தியா)-வைத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஆறு முக்கிய திட்டங்களுக்கான ஆறு தனித்துவமான கட்டுமான தொழில்நுட்பத்தை மேற்கொண்டுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சுமார் 17 லட்சம் வீடுகள் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த தொழில்நுட்பங்கள், பருவநிலை , பேரழிவைத் தாங்கக்கூடிய செயல்திறன் கொண்டவை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் ஆற்றல் திறன் கொண்டவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன, இது விரைவான கட்டுமானம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
ஜி.எச்.டி.சி-இந்தியாவின் செயல்பாட்டின் போது, அமைச்சகத்தின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு (டி.இ.சி) 54 புதுமையான கட்டுமான தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டது, அவை நாட்டின் பல்வேறு புவி-காலநிலை பிராந்தியங்களில் கட்டுமானத்தின் பொருத்தத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டன.
செயல்திறன் மதிப்பீட்டு சான்றிதழ் திட்டம் (பிஏசிஎஸ்) நாட்டின் பல்வேறு புவி-காலநிலை நிலைமைகளுக்கு ஏற்ப வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் சான்றிதழ் அளிப்பதற்காக செயல்படுத்தப்படுகிறது. பிஏசிஎஸ் திட்டத்தின் கீழ், இதுவரை 82 புதுமையான தயாரிப்புகள் மற்றும் அமைப்புகள் சான்றளிக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் கவுஷல் கிஷோர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/PKV/KPG
(Release ID: 1943325)