சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஆதார வளப் பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத் தொழில் கூட்டணியை மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று தொடங்கிவைக்கிறார்

Posted On: 27 JUL 2023 12:27PM by PIB Chennai

சென்னையில் நடைபெறும் ஜி20 4-வது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் பக்க நிகழ்வாக ஆதார வளப் பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத் தொழில் கூட்டணியை மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று மாலை தொடங்கிவைக்கிறார்.  ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ் ஆதார வளப் பயன்பாடு மற்றும் சுழற்சி பொருளாதாரத்தின் உலகளாவிய நடைமுறைகளை  மேம்படுத்துவது இந்த தொழில் துறை சார்ந்த முன்முயற்சியின் நோக்கமாகும். நீடித்த சுற்றுச்சூழல் தன்மையில் நிலையான தாக்கத்தை உருவாக்க இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்துக்கு பின்னரும் தொடரும் வகையில் இந்தக் கூட்டணி தற்சார்பு கொண்டதாக இருக்கும்.

11 நாடுகளில் தலைமையகங்களை கொண்டுள்ள 30 நிறுவனங்கள் இந்தக் கூட்டணியின் நிறுவக உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவற்றின் கூட்டுத்தளமாக இருக்கும் இந்தக்கூட்டணி, அறிவு பகிர்வு, சிறந்த நடைமுறை பகிர்வு, நீடிக்க வல்ல நடைமுறைகள் ஆகியவற்றை பங்கேற்பு தொழில்துறைகளிடையே கொண்டு செல்லும். இந்தக்கூட்டணி, தாக்கத்திற்கான கூட்டாண்மை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மேம்பாட்டுக்கான நிதி என்ற 3 வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் குறித்த ஆணையர், கனடா, ஃபிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், மொரீஷியஸ், ஐக்கி அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் முன்னிலையில் மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் ஆதார வளப் பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத் தொழில் கூட்டணியைத் தொடங்கிவைப்பார்.

***

SMB/RS/AG

 


(Release ID: 1943283) Visitor Counter : 133


Read this release in: Urdu , Urdu , English , Hindi