குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
எம்.எஸ்.எம்.இ.க்களுக்கான ஒதுக்கீடு
Posted On:
27 JUL 2023 3:36PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கடந்த ஐந்தாண்டுகளுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு இணைப்பு - 1ல் கொடுக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியை சமாளிக்க, தற்சார்பு இந்தியா அறிவிப்பின் ஒரு பகுதியாக அவசர கடன் உத்தரவாத திட்டம் (ஈ.சி.எல்.ஜி.எஸ்) அறிவிக்கப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் ரூ.50,000 கோடி சமபங்குகளை (இந்திய அரசு ரூ. 10,000 கோடியும், தனியார் பங்குகளில் இருந்து ரூ. 40,000 கோடியும்) முதலீடு செய்ய மத்திய அரசு தற்சார்பு இந்தியாவை செயல்படுத்துகிறது. கூடுதலாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் சூரிய எரிசக்தி செயல்திறனுக்கான சந்தை மாற்றம் (எம்.எஸ்.எம்.இ-யுனிடோ-ஜி.இ.எஃப் திட்டம்) போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம், பசுமைத் துறை தொழில்நுட்பத்தை மாற்றியமைக்க உதவியுள்ளது.
இணைப்பு – 1
கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆண்டு வாரியாக, எம்.எஸ்.எம்.இ. அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு:
|
(ரூ.கோடியில்)
|
ஆண்டு
|
வரவு செலவுத் திட்ட மதிப்பீடு
|
திருத்திய மதிப்பீடு
|
உண்மையாக உள்ள
|
செலவினம் % திருத்த மதிப்பீடு
|
2018-19
|
6,552.61
|
6,552.61
|
6,513.13
|
99.40
|
2019-20
|
7,011.29
|
7,011.29
|
6,717.53
|
95.81
|
2020-21
|
7,572.20
|
5,664.22
|
5,647.50
|
99.70
|
2021-22
|
15,699.65
|
15,699.65
|
15,160.46
|
96.57
|
2022-23
|
21,422.00
|
23,628.73
|
23,583.90
|
99.81
|
இத்தகவலை மத்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
ANU/SMB/KPG
(Release ID: 1943275)