மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவின் வளர்ந்து வரும் பல வளர்ச்சி தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஒரு முழுமையான கற்றல் சூழலை உருவாக்குவதை வலியுறுத்துகிறது: பேராசிரியர் பி.எஸ்.சஹாய்

Posted On: 26 JUL 2023 4:13PM by PIB Chennai

ஜம்முவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) இயக்குநர் பேராசிரியர் பி.எஸ்.சஹாய், தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவின் வளர்ந்து வரும் பல வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன்ஒரு முழுமையான கற்றல் சூழலை உருவாக்குவதை வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.  ஜம்முவின் ஐஐஎம் பழைய வளாகத்தில் 'என்இபி 2020 ஐ செயல்படுத்துவதற்கான உத்தி செயல் திட்டம்' குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது பேராசிரியர் சஹாய் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஜம்மு ஐஐடி இயக்குநர் மனோஜ் சிங் கவுர், உதவி ஆணையர் கே.வி.ஜம்மு, லடாக்கின் பிஐபி மற்றும் சிபிசி  இணை இயக்குநர் திரு.அனில் குமார், உதவி இயக்குநர் திரு.ஜி.எச்.அப்பாஸ், துணை இயக்குநர்  திரு விவேக் பதக் மற்றும் பிஐபி ஜம்முவின் ஊடக மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி திரு ஷேக் முடாசிர் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் சஹாய், தேசிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ், மாணவர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை, பாடங்களின் தேர்வு வழங்கப்படுகிறது, இது 21 ஆம் நூற்றாண்டின் திறன்களைக் கொண்ட ஒரு முழுமையான நபர்களைஉருவாக்குகிறது. 21 ஆம்நூற்றாண்டின் கல்வியின் லட்சிய இலக்குகளுடன் இணைந்த ஒரு புதிய அமைப்பை தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கும், மேலும் ஒவ்வொரு தனிநபரின் படைப்பாற்றல் திறனின் வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவதை இது அளிக்கிறது என்று கூறினார்.

ஐ.ஐ.டி ஜம்முவில் உள்ள அத்தியாவசிய திறன்களுக்கான மையம் (சி.இ.எஸ்) ஐ.ஐ.டி ஜம்முவுக்கு வெளியே உள்ளவர்களுக்கு நிதி, தொழில்நுட்பம், மென்திறன்கள் மற்றும் மொழி மற்றும் வாழ்க்கை திறன்கள் போன்ற அத்தியாவசிய திறன்களுடன் பயிற்சி அளித்து வருகிறது, இதுவரை, சி.இ.எஸ் பிராந்தியம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 1000+ நபர்களுக்கு பயனளித்துள்ளது என்று பேராசிரியர் கவுர் மேலும் கூறினார்.

கற்பித்தல், பயிற்சி, ஆராய்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் இந்திய அறிவு முறையை மேம்படுத்துவதற்கான தேசிய கல்விக் கொள்கை 2020 இன் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப ஆயுர்வேதம் மற்றும் இந்திய ஆய்வுகளுக்கான ஷரத் சராஃப் மையத்தை நிறுவுவதே சமீபத்திய வளர்ச்சியாகும் என்று பேராசிரியர் கவுர் தெரிவித்தார். இது இந்திய அறிவு அமைப்பின் களஞ்சியத்தை உருவாக்கவும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

***

(Release ID: 1942845)

ANU/PKV/KRS


(Release ID: 1943059)
Read this release in: English , Urdu , Hindi , Telugu