ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரயில்வே கட்டமைப்பில் 50 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்
Posted On:
26 JUL 2023 3:42PM by PIB Chennai
தொலைநோக்குத் திட்டம் 2024ன் கீழ், 01.04.2023 நிலவரப்படி, மொத்தம் 251 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் (76 புதிய பாதை, 19 பாதை மாற்றம் மற்றும் 156 இரட்டிப்பு) மொத்தம் 29,147 கி.மீ நீளம் கொண்டவை, இதில் உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் முழுமையாக / பகுதியாக வரும் திட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 4.92 லட்சம் கோடி செலவாகும்.
தற்போது, ரயில்வே அமைச்சகம் லூதியானாவிலிருந்து சோன்நகர் (1337 கி.மீ) வரை கிழக்கு பிரத்யேக சரக்கு நடைபாதை மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுக முனையத்திலிருந்து தாத்ரி (1506 கி.மீ) வரை மேற்கு பிரத்யேக சரக்கு நடைபாதை) ஆகிய இரண்டு பிரத்யேக சரக்கு வழித்தடங்களை (டி.எஃப்.சி) நிர்மாணிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதுவரை அனுமதிக்கப்பட்ட 2843 கி.மீ. நீள டி.எஃப்.சி.யில் 2196 கி.மீ (ஈ.டி.எஃப்.சி-1150 கி.மீ மற்றும் டபிள்யூ.டி.எஃப்.சி -1046 கி.மீ) முடிக்கப்பட்டுள்ளது.
ரயில்களை விரைவுபடுத்துவது என்பது இந்திய ரயில்வேயில் ஒரு தொடர்ச்சியான முயற்சி மற்றும் தொடர்ச்சியான செயல்முறையாகும். பயணிகள் ரயில்களை விரைவு ரயில் சேவைகளாகவும், விரைவு ரயில் சேவைகளை அதிவிரைவு ரயில் சேவைகளாகவும் மாற்றுவதன் மூலம் ரயில் சேவைகளை விரைவுபடுத்த ஐ.ஐ.டி-பாம்பேயின் உதவியுடன் கால அட்டவணையை விஞ்ஞான முறையில் சீரமைப்பதையும் ஐ.ஆர் மேற்கொண்டுள்ளது. மேலும், இந்திய ரயில்வே அதிக வேக திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 21, 2023 வரை, இந்திய ரயில்வே கட்டமைப்பில் 50 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது, மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் (எம்.ஏ.எச்.எஸ்.ஆர்) திட்டம் என்ற அதிவேக ரயில் திட்டம் ஜப்பான் அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.
அதிவேக ரயில் கட்டமைப்பின் எதிர்கால சாத்தியமான வளர்ச்சிக்காக தேசிய ரயில் திட்டம் பின்வரும் பாதைகளைக் குறிப்பிடுகிறது:
(i) டெல்லி - வாரணாசி
(ii) டெல்லி - அகமதாபாத்
(iii) மும்பை - நாக்பூர்
(iv) மும்பை - ஹைதராபாத்
(v) சென்னை - மைசூர்
(vi) டெல்லி - அமிர்தசரஸ்
(vii) வாரணாசி - ஹவுரா
ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
***
ANU/IR/KPG
(Release ID: 1942875)