ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டிற்கான சமர்த் திட்டத்தின் கீழ் 1880 மையங்களில் 1,83,844 பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
Posted On:
26 JUL 2023 3:03PM by PIB Chennai
ஜவுளி அமைச்சகத்தின் சார்பில் ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டிற்கான சமர்த் திட்டத்தின் (எஸ்.சி.பி.டி.எஸ்) புதுப்பிக்கப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டம் 2017-18 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா இன் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட நூற்பு மற்றும் நெசவு நீங்கலாக, ஜவுளிகளின் முழு மதிப்பு சங்கிலியையும் உள்ளடக்கிய, ஒழுங்கமைக்கப்பட்ட ஜவுளி மற்றும் தொடர்புடைய துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொழில்துறையின் முயற்சிகளுக்கு துணைபுரியும் வகையில் தேவை அடிப்படையிலான, வேலைவாய்ப்பு சார்ந்த தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (என்.எஸ்.க்யூ.எஃப்) இணக்கமான திறன் திட்டத்தை சமர்த் வழங்குகிறது.
சிறு நகரங்கள் உட்பட நாடு முழுவதும் சமர்த் திட்டத்தை ஜவுளி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம், பிரதமரின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைகள் (பி.எம்.மித்ரா), திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் (ஏ.டி.யு.எஃப்.எஸ்), பட்டு சமக்ரா, தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், தேசிய கைவினை மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த கம்பளி மேம்பாட்டுத் திட்டம் (ஐ.டபிள்யூ.டி.பி), தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் (என்.டி.டி.எம்), ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களுக்கான திட்டம் (எஸ்.ஐ.டி.பி) போன்ற பல்வேறு திட்டங்களை ஜவுளி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. நாட்டின் ஜவுளித் துறையின் வளர்ச்சிக்காக பிரத்தியேகமாக சேவை செய்கிறது.
ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டிற்கான சமர்த் திட்டத்தின் கீழ் 1880 மையங்களில் 1,83,844 பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ்நாட்டில் 504 மையங்கள் மூலம் 41742 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/IR/KPG
(Release ID: 1942830)
Visitor Counter : 205