சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
முதியோர் சமூகப் பாதுகாப்பு
प्रविष्टि तिथि:
25 JUL 2023 5:10PM by PIB Chennai
மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை-2011ன்படி, மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 10.38 கோடி. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.6% ஆகும். ஜூலை 2020 இல் வெளியிடப்பட்ட இந்தியா மற்றும் மாநிலங்களுக்கான மக்கள்தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் (2011-2036) தேசிய மக்கள்தொகை ஆணையத்தின் அறிக்கை, 2036 ஆம் ஆண்டில் மூத்த குடிமக்களின் மக்கள் தொகை 22.7 கோடியாக இருக்கும், அதாவது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 15% ஆக இருக்கும் எனக் கூறுகிறது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் நடத்தப்படும் அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏ.வி.ஏ.ஒய்) திட்டம் நிதி பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து, தங்குமிடம், நலன் போன்றவற்றை வழங்குவதற்கான கூறுகளை உள்ளடக்கியது. மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம் (ஐ.பி.எஸ்.ஆர்.சி) என்ற ஒரு பிரிவின் கீழ், தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு, பொழுதுபோக்கு வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளைக் கொண்ட மூத்த குடிமக்கள் இல்லங்களை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் செயலாக்க முகமைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. நலிந்த மூத்த குடிமக்களுக்கு இந்த வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் அல்லது மாத வருமானமாக ரூ.15,000/- வைத்திருக்கும் மற்றும் வயது தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு முகாம் முறையில் உதவி வாழ்க்கை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கான முதியோர் / தேசிய ஹெல்ப்லைன் (என்.எச்.எஸ்.சி) மூத்த குடிமக்களின்வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக துஷ்பிரயோகம் மற்றும் மீட்பு வழக்குகளில் இலவச தகவல், வழிகாட்டுதல், உணர்ச்சி ஆதரவு மற்றும் கள தலையீட்டை வழங்குகிறது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் முழு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய சமூக உதவித் திட்டத்தின் (என்.எஸ்.ஏ.பி.) இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 60-79 வயதுடைய முதியோருக்கு மாதந்தோறும் ரூ.200/- வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 80 வயதை அடையும் போது ஓய்வூதியம் ரூ.500/- ஆக உயர்த்தப்படுகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசால் வழங்கப்படும் உதவிக்கு சமமான தொகையையாவது டாப்-அப் தொகையை வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன, இதனால் பயனாளிகள் கண்ணியமான அளவிலான உதவியைப் பெற முடியும். தற்சமயம், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் என்.எஸ்.ஏ.பி.யின் ஐ.ஜி.என்.ஓ.ஏ.பி.எஸ் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மாதத்திற்கு ரூ.50/- முதல் ரூ.3,000/- வரை டாப்-அப் தொகையைச் சேர்த்து வருகின்றன. என்.எஸ்.ஏ.பி ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், திட்டத்தின் கீழ் பயனாளிகளின் திட்ட வாரியாக, மாநில / யூனியன் பிரதேசங்கள் வாரியான வரம்பு வரை உதவி வழங்கப்படுகிறது. தற்சமயம், நாட்டில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2.21 கோடியாகும், மேலும் இத்திட்டம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கிட்டத்தட்ட 100% செறிவூட்டலை எட்டியுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2010-11 ஆம் ஆண்டில் மூத்த குடிமக்களுக்கு மாநில சுகாதார வழங்கல் அமைப்பின் பல்வேறு நிலைகளில், அதாவது ஆரம்ப, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகளில் பிரத்யேக சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் முதியோருக்கான சுகாதார பராமரிப்புக்கான தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் இரண்டு கூறுகள் உள்ளன. அதாவது, மாவட்ட மருத்துவமனைகள், சமுதாய சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள்/ சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு சேவைகள் வழங்குதல், இந்தியாவின் 18 மாநிலங்களில் உள்ள 19 மருத்துவக் கல்லூரிகளில் அமைந்துள்ள பிராந்திய முதியோர் மையங்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இரண்டு தேசிய முதியோர் மையங்கள் மூலம் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. அன்சாரி நகர், புதுதில்லி மற்றும் மற்றொன்று சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி. மூத்த குடிமக்கள் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சியும் இதில் அடங்கும். மேலும், 10 கோடி ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை (தோராயமாக 50 கோடி பயனாளிகள்) உள்ளடக்கிய ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆயுஷ்மான் பாரத்-பி.எம்.ஜே.ஏ.ஒய் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ராஷ்டிரிய ஸ்வஸ்தியா பீமா யோஜனா மற்றும் மூத்த குடிமக்கள் சுகாதார காப்பீட்டுத் திட்டம் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத்-பி.எம்.ஜே.ஏ.ஒய் திட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பி.ஒய் மற்றும் எஸ்.சி.ஐ.எஸ் ஆகியவற்றின் பதிவு செய்யப்பட்ட அனைத்து பயனாளி குடும்பங்களும் நன்மைகளைப் பெற தகுதியுடையவை.
இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பவுமிக் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகஅளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
----
ANU/PKM/KPG
(रिलीज़ आईडी: 1942579)
आगंतुक पटल : 194