உள்துறை அமைச்சகம்
ஆள்கடத்தல் தடுப்பு வழக்குகள்
Posted On:
25 JUL 2023 4:57PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சகம் 2020-ம் ஆண்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தளமான க்ரைம் மல்டி ஏஜென்சி சென்டர் (க்ரை-மேக்) எனப்படும் பன்முக அமைப்பு குற்றத் தடுப்பு மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளிட்ட முக்கிய குற்றங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கு இது உதவுகிறது. விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், நாடு முழுவதும் உள்ள காவல்துறை பிரிவுகளிடையே தொடர்புகொள்வதற்கும் க்ரை-மேக் தொடங்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தெரிவிக்கும் குற்றப் புள்ளிவிவரங்களைத் தொகுத்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகம், அதன் வருடாந்திர வெளியீடான 'க்ரைம் இன் இந்தியா'வில் வெளியிடுகிறது. சமீபத்திய 2021 ஆம் ஆண்டு அறிக்கையில் மொத்தம் 2189 மனித கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
காவல்துறை மற்றும் 'பொது சட்டம் ஒழுங்கு' ஆகியவை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் "மாநில பட்டியலில் வருகின்றன. எனவே, ஆட்கடத்தல் குற்றத்தைத் தடுப்பதும் எதிர்கொள்வதும் மாநில அரசுகளிடம் உள்ளது. இருப்பினும், மனிதக் கடத்தலைத் தடுப்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு உள்துறை அமைச்சகம் துணைபுரிகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு அஜய் குமார் மிஸ்ரா இதனைத் தெரிவித்துள்ளார்.
***
ANU/PLM/KPG
(Release ID: 1942559)