உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல்

Posted On: 25 JUL 2023 4:54PM by PIB Chennai

எல்லை தாண்டிய ஊடுருவலைச் சமாளிக்க இந்திய அரசு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பன்முக உத்தியைக்  கையாண்டுள்ளது. ஊடுருவல்காரர்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சர்வதேச எல்லை (ஐபி) / எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) ஆகியவற்றில் படைகளை தந்திரோபாயமாக நிலைநிறுத்துதல்,கண்காணிப்பு கேமராக்கள், இரவு பார்வை கேமராக்கள், வெப்ப உணர்திறன் கருவிகள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், ஐபி / எல்ஓசியில் பல அடுக்கு நிலைநிறுத்தல், எல்லை வேலி அமைத்தல், ராணுவம் / எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) ஊடுருவல், பதுங்குதல் மற்றும்  ரோந்து குறித்து முன்கூட்டியே மற்றும் இலக்கு சார்ந்த தகவல்களை சேகரிக்க உளவுத்துறை பணியாளர்களை அனுப்புதல், உள்ளூர் நுண்ணறிவை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் எல்லை காவல் நிலையங்களை நிறுவுதல் ஆகியவை இதில் அடங்கும்.

எல்லை தாண்டிய ஊடுருவலைச் சமாளிக்க இந்திய அரசு கடைப்பிடித்து வரும் அணுகுமுறை, ஊடுருவலைக் கணிசமாகக் குறைப்பதை உறுதி செய்துள்ளது. ஆண்டு வாரியான விவரங்கள் பின்வருமாறு:

2019ம் ஆண்டு 141 ஆக இருந்த ஊடுருவல் நிகழ்வுகள் தற்போது இந்த ஆண்டு ஜூன் வரை அடியோடு இல்லாத நிலை நிலவுகிறது. 2020ம் ஆண்டு 51, 2021-ல் 34, 2022-ல் 14 எனப் படிப்படியாக குறைந்து வந்தது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்துள்ளார்.

-----

ANU/PKV/KPG


(Release ID: 1942550) Visitor Counter : 126
Read this release in: Urdu , English , Telugu