கூட்டுறவு அமைச்சகம்
கூட்டுறவு சங்கங்களுக்கான தொழில்-கல்வி இணைப்பு
Posted On:
25 JUL 2023 2:36PM by PIB Chennai
கூட்டுறவு அமைச்சின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான என்.சி.சி.டி (கூட்டுறவு பயிற்சிக்கான தேசிய கவுன்சில்) நடத்தும் பல்வேறு பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் பிற கல்வித் திட்டங்களில் துறை வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கான தொழில்-கல்வி இணைப்புகள் உறுதி செய்யப்படுகின்றன.
என்.சி.சி.டி.யின் 19 பிராந்திய மற்றும் மாநில அளவிலான நிறுவனங்களில் திட்ட ஆலோசனைக் குழுவின் (பி.ஏ.சி) நிறுவன பொறிமுறை மூலம் பயிற்சித் திட்டங்களில் தொழில்துறை-கல்வி இணைப்பு கட்டமைக்கப்படுகிறது. பி.ஏ.சி. சம்பந்தப்பட்ட மாநிலத்தின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் தலைமையில் செயல்படுகிறது. மாநில கூட்டுறவு ஒன்றியங்கள் / கூட்டமைப்புகளின் தலைமை நிர்வாகிகள், தொழில்கள், கைத்தறி, மீன்வளம், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் வேளாண்மை, தொழில் துறை வல்லுநர்கள் போன்ற பிற உறுப்பினர்களில் அடங்குவர்.
மேலும், கூட்டுறவுத் துறையில் தொழில் மற்றும் கல்வி கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக தொழில் / துறை வல்லுநர்களுடன் கருத்தரங்குகள் / வெபினார்கள், பயிற்சியாளர்களின் விரிவுரைகள், தொழில் வெளிப்பாடு வருகைகள் மற்றும் இன்டர்ன்ஷிப்கள் ஆகியவை தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
நபார்டு வங்கியுடன் இணைந்து, சாப்ட்கோப் திட்டம் (கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு பயிற்சிக்கான நிதி உதவித் திட்டம்) 2020-21 மற்றும் 2022-23 க்கு இடையில் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மற்றும் பிற தொடக்க கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதற்காக, முக்கியமாக விவசாயிகளான 20,955 பங்கேற்பாளர்களுக்கு 690 பயிற்சி திட்டங்களை நடத்தியது. இது தவிர, என்.சி.சி.டி 2020-21 மற்றும் 2022-23 க்கு இடையில் கிராமப்புறங்களில் உள்ள 1,61,043 விவசாயிகளுக்கு 2342 பயிற்சி / விழிப்புணர்வு திட்டங்களை நடத்தியது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.
----
ANU/PKV/KPG
(Release ID: 1942460)
Visitor Counter : 250