கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கூட்டுறவு தகவல் தரவை மேம்படுத்துதல்

Posted On: 25 JUL 2023 2:38PM by PIB Chennai

கூட்டுறவு அமைச்சகம் ஒரு விரிவான தேசிய கூட்டுறவு தகவல் தரவுத்தளத்தை படிப்படியாக உருவாக்கி வருகிறது. தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்), பால்வளம் மற்றும் மீன்வளக் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகிய மூன்று துறைகளைச் சேர்ந்த சுமார் 2.64 லட்சம் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களின் தகவல்களைத் திரட்டும் பணி 2023 பிப்ரவரியில் முதல் கட்டமாக முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ், தேசிய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இணையங்களின் தகவல்களைத் தொகுக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டத்தின் கீழ், மற்ற அனைத்துத் துறைகளிலும் உள்ள மீதமுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் தகவல்களும் இணைக்கப்பட்டு தகவல் தரவுத்தளம் விரிவுபடுத்தப்படுகிறது. மூன்றாம் கட்டத்தின் கீழ் தகவல் சேகரிப்பு முடிந்ததும் தேசிய கூட்டுறவு தகவல் தரவு வெளியிடப்படும்.

தேசிய கூட்டுறவு அமைப்பால் (என்.சி.யூ.ஐ) வெளியிடப்பட்ட இந்திய கூட்டுறவு இயக்க புள்ளிவிவரம் -2018 இன் படி, நாட்டில் மொத்தம் 8,54,355 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 24, 482 கூட்டுறவு சங்கங்களும் புதுச்சேரியில் 532 கூட்டுறவு சங்கங்களும் உள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.

 

***

ANU/PLM/KPG


(Release ID: 1942454) Visitor Counter : 154


Read this release in: English , Urdu , Marathi , Manipuri