தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை

Posted On: 24 JUL 2023 4:08PM by PIB Chennai

2021-22 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2019-20 ஆம் ஆண்டில் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மொத்த மக்களின் எண்ணிக்கை சுமார் 43.99 கோடியாகும்.

18.07.2023 நிலவரப்படி, 28.96 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இஷ்ராம் போர்ட்டலின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் சுமார் 52.70 லட்சம் தொழிலாளர்கள் ஹரியானாவில் உள்ள இஷ்ராம் இல் பதிவு செய்துள்ளனர்.

கோவிட் -19 தொற்றுநோய்களின் போது இந்தியா முழுவதும் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வணிகத்திற்கு ஊக்கமளிக்கவும், கோவிட் 19 இன் பாதகமான தாக்கத்தை குறைக்கவும் அரசாங்கம் தற்சார்பு இந்தியா  தொகுப்பை அறிவித்தது. இதன் கீழ், 27 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஊக்கத்தை மத்திய அரசு வழங்கியது.

கோவிட்19தொற்றுநோய்களின் போது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வேலை இழப்பை மீட்டெடுப்பதற்கும் முதலாளிகளை ஊக்குவிப்பதற்காக தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம்  (ஏபிஆர்ஒய்) 2020 அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்டது. பயனாளிகளை பதிவு செய்வதற்கான கடைசி தேதி 31.03.2022 என நிர்ணயிக்கப்பட்டது.  இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 11.03.2023 வரை 60.3 இலட்சம் பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தங்கள் சொந்த மாநிலத்திற்குத் திரும்பிய அமைப்புசாரா தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை எளிதாக்கும் பொருட்டு, பிரதமரின் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்20 ஜூன்2020 அன்று 116 மாவட்டங்களில் 125 நாட்களுக்கு தீவிரமாக நடத்தப்பட்டது.

24.03.2020 முதல் 31.03.2020 வரை வேலையிழந்த நபர்களுக்கான அடல் பீமிட் வியாக்தி கல்யாண் யோஜனா (ஏ.பி.வி.கே.ஒய்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத்தை ஊழியரின் சராசரி நாள் வருமானத்தில் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு. மக்களவையில் ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.

 

***************

 

 

ANU/PKV/KPG

 

 


(Release ID: 1942211) Visitor Counter : 240


Read this release in: English , Urdu , Telugu