புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில்நுட்ப கல்விக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி

Posted On: 24 JUL 2023 3:40PM by PIB Chennai

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் புதிய வழிகாட்டுதல்கள், 2023 இன் கீழ், இந்த நிதியை கல்வி நோக்கங்களுக்காக வன்பொருள், மென்பொருள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வாங்கப் பயன்படுத்தலாம். (நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவு -3.3). இருப்பினும், இப்பட்டியல் முழுமையானது அல்ல. வழிகாட்டுதல்களின் அத்தியாயம் -5 இல் கொடுக்கப்பட்டுள்ள திட்டத்தின் ஒட்டுமொத்த கொள்கைகளுக்கு உட்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரைகளின் பேரில் புதிய பணிகளைப்  பட்டியலில் சேர்க்கலாம்.

இந்தத் தகவலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர்திரு  ராவ் இந்தர்ஜித் சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

*****

ANU/SMB/KPG

 

 


(Release ID: 1942205)
Read this release in: English , Urdu , Marathi , Telugu