நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விலை நிலைப்படுத்தும் நிதியின் கீழ் தக்காளியை கொள்முதல் செய்தது மத்திய அரசு

Posted On: 21 JUL 2023 3:35PM by PIB Chennai

தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் தக்காளி கிலோ ரூ.70 க்கு விற்பனை

 

தக்காளி உள்ளிட்ட வேளாண் தோட்டக்கலைப் பொருட்களின் மதிப்புக் கூட்டலை அதிகரிக்கவும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும் ஆபரேஷன் கிரீன்ஸ் செயல்படுத்தப்படுகிறது.

வெளியிடப்பட்டது: 21 ஜூலை 2023 3:35 பிற்பகல் பிஐபி டெல்லி

மகாராஷ்டிராவின் நாசிக், நாரியங்கோன் மற்றும் அவுரங்காபாத் பகுதியிலிருந்தும், மத்தியப் பிரதேசத்திலிருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளியின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுகர்வோர் விவகாரத் துறை, தக்காளி உட்பட 22 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தினசரி விலைகளை கண்காணித்து வருகிறது. தக்காளியின் தற்போதைய விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கவும், விலை நிலைப்படுத்தும் நிதியின் கீழ் தக்காளியை கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு அதிக மானிய விலையில் கிடைக்கச் செய்யும் பணியை அரசு தொடங்கியுள்ளது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் சம்மேளனம் (என்.சி.சி.எஃப்) மற்றும்தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு ஆகியவை ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மண்டிகளில் இருந்து தக்காளியை தொடர்ந்து கொள்முதல் செய்து, டெல்லி-என்.சி.ஆர், பீகார், ராஜஸ்தான் போன்றவற்றில் உள்ள முக்கிய நுகர்வு மையங்களில் மலிவு விலையில் வழங்குகின்றன. ஆரம்பத்தில் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, 16.07.2023 முதல் கிலோ ரூ.80 ஆகவும், பின்னர் 20.07.2023 முதல் கிலோ ரூ.70 ஆகவும் குறைக்கப்பட்டது.

தற்போதைய தக்காளி விலை உயர்வு விவசாயிகளை அதிக தக்காளி பயிரை பயிரிட ஊக்குவிக்கும், இது வரும் மாதங்களில் விலையை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை  சந்தை தலையீட்டுத் திட்டத்தை (எம்.ஐ.எஸ்) செயல்படுத்துகிறது, இதன் மூலம் அழியக்கூடிய வேளாண்-தோட்டக்கலைப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் பொருளாதார மட்டங்கள் மற்றும் உற்பத்திச் செலவை விட விலைகள் வீழ்ச்சியடையும் உச்ச வருகை காலத்தில் அதிக விளைச்சல் ஏற்பட்டால் நெருக்கடியான விற்பனையிலிருந்து பாதுகாக்கிறார்கள். இத்திட்டத்தின் கீழ், விலை வீழ்ச்சியால் ஏற்படும் இழப்பை மத்திய அரசும், மாநில அரசும் 50:50 என்ற விகிதத்தில் ஏற்றுக் கொள்கின்றன. எம்.ஐ.எஸ் தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை, வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக்கு மாநில அரசுகளிடமிருந்து தக்காளியின் நெருக்கடியான விற்பனையை நிவர்த்தி செய்ய சந்தை தலையீட்டிற்கான எந்த முன்மொழிவும் வரவில்லை.

தக்காளி உள்ளிட்ட வேளாண் தோட்டக்கலைப் பொருட்களின் மதிப்புக் கூட்டலை அதிகரிக்கவும், அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்கவும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆபரேஷன் கிரீன்ஸை செயல்படுத்துகிறது.இத்திட்டத்தின் நோக்கங்கள் (1) விவசாயிகளின் விளைபொருட்களின் மதிப்பை உயர்த்துதல்; (ii) விவசாயிகளை நெருக்கடியான விற்பனையிலிருந்து பாதுகாத்தல்; (iii) உணவு பதப்படுத்துதல் / பாதுகாக்கும் திறன் மற்றும் மதிப்பு கூட்டல் அதிகரிப்பு;  (iv) அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல். இத்திட்டத்தில் குறுகிய கால தலையீடுகள் மற்றும் நீண்ட கால தலையீடுகள் ஆகிய இரண்டும் உள்ளன. குறுகிய கால தலையீடுகளில் தனிப்பட்ட விவசாயிகள், விவசாயிகள் குழு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், மாநில விற்பனை மற்றும் கூட்டுறவு இணையம், உணவு பதப்படுத்துபவர்கள், உரிமம் பெற்ற கமிஷன் முகவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு போக்குவரத்து மற்றும் சேமிப்பு மானியம் ஆகியவை அடங்கும். நீண்டகால தலையீடுகளின் கீழ், ஒருங்கிணைந்த மதிப்பு சங்கிலி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன.

இத்தகவலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***********

(Release ID: 1941389)

ANU/PKV/KRS(Release ID: 1941591) Visitor Counter : 112


Read this release in: English , Urdu , Marathi , Telugu