கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் துறையின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல்

प्रविष्टि तिथि: 21 JUL 2023 3:24PM by PIB Chennai

நாட்டின் கடல்சார் துறையை விரிவுபடுத்தவும்நவீனப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதுகடல்சார் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்புதிய கப்பல் நிறுத்தும் தளங்கள் மற்றும் முனையங்கள் கட்டுதல்ஏற்கனவே உள்ள கப்பல் நிறுத்தும் தளங்கள் மற்றும் முனையங்களை இயந்திரமயமாக்குதல்துறைமுக நுழைவுப் பகுதிகளில் பெரிய கப்பல்களை ஈர்ப்பதற்கு கடலின் அடிப்பகுதியை ஆழப்படுத்துவதற்கான தூர்வாருதல்சாலை மற்றும் ரயில் இணைப்பை மேம்படுத்துதல்பெரிய துறைமுகங்களின் திறனை அதிகரிக்க உதவுதல் ஆகியவை இந்த செயல்முறையில் அடங்கும்இதன் விளைவாகபெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 31.3.2023 நிலவரப்படிபெரிய துறைமுகங்களின் நிறுவப்பட்ட திறன் 1,617 மெட்ரிக் டன் ஆகும்இது முக்கிய துறைமுகங்களில் தற்போதுள்ள சரக்கு போக்குவரத்தை கையாள போதுமானது.

 

கடல்சார் பயிற்சிதேர்வுசான்றளிப்பு முறை ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்தவும்கடல்சார் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிக்கவும்மாலுமிகளுக்கான நல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதுஇந்த நடவடிக்கைகள் காரணமாகஇந்த ஆண்டில் இந்திய மற்றும் வெளிநாட்டுக் கொடிகள் கொண்ட கப்பல்களில் பணியமர்த்தப்பட்ட இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை 2,82,918 என்ற சாதனை அளவை எட்டியுள்ளதுகப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல்களில் இந்தியக் கொடிபறப்பதை மேம்படுத்துவதற்கான சில கொள்கைகள் பின்வருமாறு:

 

கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கை (2016-2026): இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கான நிதி உதவிக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதுஇந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கு ஒப்பந்த விலைஉண்மையான ரசீதுகள்நியாயமான விலை (எது குறைவோ அதுஆகியவற்றில் 20% நிதி உதவி வழங்கப்படுகிறதுவழங்கப்படும் நிதி உதவி ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் 3% குறைகிறது.

 

இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு மானிய உதவி:அமைச்சகங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (சி.பி.எஸ்.விடுத்த உலகளாவிய டெண்டர்களில் இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு மானிய உதவியாக ஐந்து ஆண்டுகளில் ரூ.1624 கோடியை வழங்குவதன் மூலம் இந்தியாவில் வணிகக் கப்பல்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுமானிய உதவி விகிதம் கப்பலின் வயதை அடிப்படையாகக் கொண்டதுஇத்திட்டம் தொழில்முனைவோரை இந்திய கொடியின் கீழ் கப்பல்களை பதிவு செய்ய ஊக்குவிக்கிறது.

 

இத்தகவலை மத்திய துறைமுகங்கள்கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

*****

(Release ID: 1941375)

ANU/SMB/KRS


(रिलीज़ आईडी: 1941569) आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu