கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கடல்சார் பயிற்சித் திட்டங்கள்
Posted On:
21 JUL 2023 3:25PM by PIB Chennai
இந்தியாவில் 165 கடல்சார் பயிற்சி நிறுவனங்களுக்கு கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அல்லது வெளிநாட்டு கப்பல்களில் மாலுமிகளின் வேலைவாய்ப்பு என்பது சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐ.எம்.ஓ)) பயிற்சி, சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு தரநிலைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கைக்கு இணங்க அவர்களின் பயிற்சி, மதிப்பீடு மற்றும் சான்றிதழைப் பொருத்தது. இந்த உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கடல்சார் பயிற்சி படிப்புகளின் பட்டியலையும் டிஜிஎஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படிப்புகள் அனைத்தும் ஐ.எம்.ஓ வழங்கிய மாதிரி பாடத்திட்டம் மற்றும் எஸ்.டி.சி.டபிள்யூ உடன்படிக்கை, 2010-க்கு ஏற்ப இருக்க வேண்டும். மேலும், பயிற்சி, தேர்வு மற்றும் மதிப்பீட்டுத் திட்டக் (டி.இ.இ.பி) கையேடு டி.ஜி.எஸ்-ஆல் வெளியிடப்பட்டுள்ளது. இது பயிற்சி வகுப்புகள், கடலுக்குச் செல்லும் சேவைகள் மற்றும் தேர்வு பற்றிய தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் விவரங்களை வழங்குகிறது. இவை தவிர, கடல்சார் பயிற்சி நிறுவனங்களின் (எம்.டி.ஐ) படிப்புகளுக்கு ஒரு பொதுவான பாடத்திட்டம் உள்ளது. அதாவது பயிற்சியாளர்களுக்கான ஒரே வகையான ஒருங்கிணைப்பு படிப்பு.
இணையவழி கற்றல்: இணையவழி கற்றலை டி.ஜி.எஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கட்டணமின்றி மின் கற்றல் பொருட்களை வழங்குகிறது. இது மாலுமிகளின் தரத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தவும், அவர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.
இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1941376)
ANU/SMB/KRS
(Release ID: 1941566)