ஜவுளித்துறை அமைச்சகம்

ஹத்கர்கா சம்வர்தன் சகாயதா திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டு முதல் 2023 ஜூலை வரை கர்நாடகாவுக்கு ரூ.659.26 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது

Posted On: 21 JUL 2023 3:31PM by PIB Chennai

ஹத்கர்கா சம்வர்தன் சகாயதா (எச்.எஸ்.எஸ்), திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ், தகுதிவாய்ந்த கைத்தறி முகவர்கள் மற்றும் கைத்தறி தொழிலாளர்களுக்கு தேவை அடிப்படையிலான நிதி உதவியை வழங்குவதற்காக ஜவுளி அமைச்சகம் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஹத்கர்கா சம்வர்தன் சகாயதா (எச்.எஸ்.எஸ்) திட்டத்தின் கீழ், கைத்தறி தொழிலாளர்களுக்கு தறிகள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்தவும்,  அவற்றின் தரத்தை மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

2020-21 முதல் 2023-24 வரை (14.07.2023 வரை) கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பாண்டில் எச்.எஸ்.எஸ் திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலத்திற்கு ரூ.659.26 நிதி வழங்கப்பட்டுள்ளது.

2020-21- ஆண்டில் ரூ. 171.74  லட்சமும்,     2021-22 ம் ஆண்டில் ரூ. 30.16     லட்சமும் 2022-23-ம் ஆண்டில் 341.64 லட்சமும் நடப்பு நிதி ஆண்டில்    14.07.2023 வரை ரூ. 115.72 லட்சமும் என மொத்தம் ரூ. 659.26 கர்நாடக மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****

(RELEASE ID: 1941385)

ANU/PLM/KRS



(Release ID: 1941528) Visitor Counter : 72


Read this release in: Kannada , English , Urdu