பெரிய துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். புதிய கப்பல் நிற்கும் தளங்கள் மற்றும் முனையங்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள கப்பல் நிற்கும் தளங்கள் மற்றும் முனையங்களை இயந்திரமயமாக்குதல், துறைமுக நுழைவுப் பகுதிகளில் பெரிய கப்பல்களை ஈர்ப்பதற்கு கடலின் அடிப்பகுதியை ஆழப்படுத்துவதற்கான தூர்வாருதல், சாலை மற்றும் ரயில் இணைப்பை மேம்படுத்துதல், முக்கிய துறைமுகங்களின் திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்க உதவுதல் ஆகியவை இந்த செயல்முறையில் அடங்கும்.
மேலும் வணிகத்தை எளிதாக்கும் திட்டத்தின் கீழ் உள்ளூர் மற்றும் வெளியூர் சரக்கு காத்திருப்பு நேரத்தைக் குறைக்க நேரடி துறைமுக விநியோகம் மற்றும் நுழைவு, கொள்கலன் ஸ்கேனர்கள் நிறுவுதல், மின்-டெலிவரி ஆர்டர்கள் / விலைப்பட்டியல்கள் / இன்வாய்ஸ்கள், ஆர்.எஃப்.ஐ.டி அடிப்படையிலான கேட்-ஆட்டோமேஷன் முறை, தேசிய லாஜிஸ்டிக் போர்டல்-மரைன்-சாகர் சேது போன்ற பல்வேறு முயற்சிகள் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.
கப்பல்கள் அங்கு நிறுத்துவதற்காக காத்திருக்க வேண்டியதில்லை என்பதால் இதுபோன்ற வழிகாட்டுதல்கள் நதி முனையங்களில் குறிக்கப்படவில்லை.
குவஹாத்தி மற்றும் துப்ரி இடையே நீர்வழி / உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது ரூ.474 கோடி மொத்த செலவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய நீர்வழி -2 (பிரம்மபுத்திரா நதி) ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஒரு பகுதியாகும்.
குவஹாத்தி (பாண்டு) - துப்ரி பகுதிக்கான குறிப்பிட்ட திட்ட கூறுகளின் விவரங்கள் பின்வருமாறு - (1) ஜோகிகோபா முனையம் கட்டுதல், (2) பாண்டு துறைமுகத்திற்கு மாற்று சாலை, (3) பாண்டுவில் கப்பல் பழுதுபார்க்கும் வசதி, (4) பாண்டுவில் உள்ள ஐ.டபிள்யூ.ஏ.ஐ நிலத்தில் சுற்றுச்சுவர், (5) துப்ரி முனையத்திற்கான ஆய்வு, நிலம் கையகப்படுத்துதல் உட்பட தற்போதுள்ள அணுகு சாலையை மேம்படுத்துதல். மீதமுள்ள செயல்பாடுகள் தொடர்ச்சியான தன்மை கொண்டவை, அதாவது (i) நடைபாதை மேம்பாடு (ii) வழிசெலுத்தல் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு (iii) நிலையான மற்றும் மிதக்கும் முனையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு போன்றவை. இந்த நடவடிக்கைகள் வருடாந்திர அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1941379)
ANU/SMB/KRS